Skip to main content

Posts

Showing posts from February, 2020

வாழ்க்கைக் கணக்கு! ( life lessons )

அன்பு தம்பி , தங்காய் கேட்டுக்கொள் ! வாழ்வின் சூத்திரம் அறிந்துகொள் ! அன்பினை கூட்டியே வாழ்வினை சுவைத்திடு ! ஆணவம் கழித்து அறிவை வளர்த்திடு ! இன்சொல் பெருக்கி உறவைக் காத்திடு ! ஈகை , பரிவு , பாசம் வகுத்து மனிதம் போற்றிடு ! நான் எனது என்ற குறுகிய வட்டத்தை விடுத்திடு ! நாம் நமது என்ற நேர்கோட்டில் பயணித்திடு ! இதுவே வாழ்வின் வெற்றிக்கணக்கு ! இனி இல்லை தோல்வி உனக்கு !

இளைய சமுதாயமே! வாழ்வில் வெற்றி பெற சில படிக்கட்டுகள்! ( guideline to youngsters)

v   எப்போதும் முற்போக்கான வார்த்தைகளைப் பேச வேண்டும் ! v   உன் சிந்தனை நேர்மறையாக இருக்க வேண்டும் ! v   உன்னைப்பற்றி நல்லெண்ணம் கொண்டிரு ! v   தாழ்வு மனப்பான்மையை அகற்று ! v   உன் எதிர்கால கனவை விரிவாக்கி அற்பத்தனமான சிந்தனையை அகற்று ! v   எப்போதும் மன மகிழ்வுடன் இரு ! v   கசப்புணர்வை அகற்று ! v   சோகத்திலிருந்தும் சோம்பலிலலிருந்தும் எழுந்து நம்பிக்கையோடு செயல்படு ! v   எப்போதும் பிறரை பின்பற்றி நடக்காதே! நீ   நீயாக இருக்க முயற்சி செய் ! v   இதைச் செய்ய என்னால் இயலாது , இதைச் செய்ய தகுதி இல்லையென்று கூறி முயற்சி செய்யாமல் விடாதே ! முயற்சி செய் ! v   சோகம் , சோம்பல், கவலை இவற்றிலிருந்து எழுந்து நம்பிக்கையோடு செயல்படு ! v   உன் குணம் , படிப்பு , கல்வி , செல்வாக்கு போன்றவற்றை பிறருடன் ஒப்பிடுவது உன் முன்னேற்றத்தின்   தடைக்கல் ! எனவே பிறரோடு உன்னை ஒப்பிடுவதை நிறுத்து !

பெண்ணே! (a letter to women kind)

கண்ணே கலை மானேயென்று கவிதை பாடும் கூட்டமதை நீ நம்பிவிடாதே! கருவறையிலே உன்னை சமாதியாக்கும் கூட்டம் இங்கு உண்டென்பதை மறந்துவிடாதே ! கங்கா காவிரி யமுமையென   பெயரிடும்   கூட்டமதை   நீ நம்பி விடாதே! கௌரவக்கொலை , ஆணவக்கொலை, சிசுக்கொலையெனப் பட்டியல்கள் பலவுண்டு நீ மறந்துவிடாதே ! சரஸ்வதி பார்வதி லட்சுமியென உனை தெய்வமாக்குவதை நீ நம்பிவிடாதே! திரையிலும் விளம்பரங்களிலும் உன்னைக் காட்சிப் பொருளா க்கி காசு பார்க்கும் கூட்டம் உண்டு மறந்து விடாதே! பொன்னே தங்கமே வைரமேயென   உனை போற்றுவதை நீ நம்பிவிடாதே! நீ சமைக்கும் போது மட்டும் தான் ஸ்டோவ் வெடிக்கும் என்பதை மறந்துவிடாதே!   ஆணும் பெண்ணும் சரிநிகர் என்பர் ஆனால் நிர்பயாவும் நிதர்சனாவும் இங்கு பலருண்டு மறந்துவிடாதே! பாலே , தேனே , மணியேயென்று மழலையரைக் கொஞ்சும் கூட்டமதை நீ நம்பிவிடாதே!   பால்மணம் மாறா பிஞ்சுகளை நசுக்கும் நச்சுப்பாம்பும் இங்கு உண்டு மறந்துவிடாதே! ஐயோ! பெண்ணாகப் பிறந்தால் எத்தனை சி...

நிறுத்து! பெண் சிசு கொலையை! (women child killing)

தாயின் கருவறைக்குள்ளிருக்கும் பெண் சிசுவை தரணியில் வரும் முன்னே சிதைக்கும் வீணர்களே ! தரங்கெட்ட உங்கள் சிந்தனைகளை என்று தவிர்ப்பீர்! கள்ளிப்பால் புகட்டியும் நெல் மணி  கொடுத்தும் கனிவின்றி பாதகச் செயல் புரியும் வீணர்களே! தரங்கெட்ட உங்கள் செயல்களை என்று நிறுத்துவீர்! அன்பினால் அகிலத்தை ஆட்கொண்ட அன்னை தெரசா அறிவு , தீரத்தினால் விண்ணில் சாகசம் செய்த கல்பனா   கூரிய மதியினால் பாரதத்தை மேம்படுத்திய இந்திரா நலிவுற்றோர் நலம் காக்க போரிட்ட மேதாபட்கர்   தடகளத்தில் சாதனை புரிந்த தங்க மங்கை பி . டி . உஷா   அழகினால் அகிலமெங்கும் புகழ் பெற்ற ஐஸ்வர்யா   ராய் அனைவரும் இங்கே பிறந்தது பெண்ணாக! என்று உணர்வீர் பெண்மையின் மேன்மையை ? பெண்ணின்றி புவியில் மானிடம் மலருமோ ? பெண்ணின்றி மண்ணில் மனிதம் வாழுமோ? உணர்வீர் மானிடரே, பெண்மையை மதிப்பீர்! பெண் குழந்தையைப் போற்றி வளர்ப்பீர் !