Backrooms – ஒரு Psychological Thriller மட்டுமல்ல... மனித மனதின் நினைவுகளுக்குள் நடக்கும் ஒரு பயணம் சமீப காலமாக ஹாலிவுட்டில் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகின்றன. Obsession படத்திற்குப் பிறகு, அந்த வரிசையில் என்னை மிகவும் கவர்ந்த படம் Backrooms. இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருந்தேன். குறிப்பாக இதன் Backrooms concept பற்றி YouTube வீடியோக்கள், Instagram பதிவுகள் என கொஞ்சம் தெரிந்திருந்தது. அதனாலேயே ஒரு சந்தேகம் இருந்தது. "இந்தக் கருத்தை எப்படி ஒரு முழுநீள திரைப்படமாக மாற்றியிருப்பார்கள்?" படத்தைப் பார்த்த பிறகு அந்த சந்தேகத்திற்கு நல்ல பதில் கிடைத்தது. மேலோட்டமாகப் பார்த்தால், கதை மிகவும் எளிமையானது. தனது வாழ்க்கையிலும் தொழிலிலும் தோல்வியைச் சந்தித்த ஒரு முன்னாள் கட்டிடக் கலைஞர். அவர் நடத்தும் மரச்சாமான் கடையும் சரியாக இயங்கவில்லை. அந்தக் கடையைப் புதுப்பிக்கும் போது ஒரு விசித்திரமான நுழைவாயில் கிடைக்கிறது. அந்த வாசல் அவரை முற்றிலும் வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. அதற்கு மேல் கதையைச் சொன்னால் அது ஸ்பாய்லராகிவிட...
tamil kavithaigal and cine takes - blog of movie world