அரிது அரிது மானிடப் பிறப்பு அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! அரிதாய் உயிரை மதுக்கடைகளில் இன்று, அடமானம் வைக்கிறான் ஆறறிவு மனிதன்! மது மற்றும் போதைக்கு அடிமை ஆகி, மதியிழந்து மாண்பிழந்து மானமிழந்து, வெட்கிப் போவதும் எதனாலோ? மதுவெனும் அரக்கன் ஆட்கொண்டதால், உறைவிடம் மறந்து உடுக்கை இழந்து, உருண்டு புரளும் இடம் தெருவோரமோ? மானிடராய் பிறத்தல் அரிதென்பதை மறந்து, மாக்களுடன் சமரசம் செய்தீரோ மானுடரே! மது அடிமையெனும் நோயில் சிக்கி கொண்டு, மனைவி மக்களை வேதனையில் நிறுத்தி, அன்றாடம் கூலியை மதுக்கடையில் கரைத்து, அல்லல் படுத்துவீரோ உம்மவர்களை? கொல்லும் விஷமாம் மது அது உமை, கொஞ்சம் கொஞ்சமாய் அரிக்கிறதே மானிடரே! அத்தனை வியாதியும் வரிசையாய், அல்லல் படுத்தும் உமை என்றுமே! எமனை தெரிந்தே நீவிர் விரைவில், எனைத் தீண்டும் என அழைப்பீரோ? அறியீரோ உம் உடல் இறைவன் இல்லமென்று! அரிதாம் மனிதப்பிறவி ஒருமுறையே! ஆழ்ந்து சிந்தித்து முடிவெடும்! மாண்புடை மனிதனாய் வையத்தில் வாழ்ந்திட , மதுவினை மறந்திடுவேனென சபதத்தை, நெஞ்சினி...