Skip to main content

Posts

Showing posts from April, 2020

மனிதம்! (humanity)

மனிதம்! “கொரோனாவால் மடிந்திட்டாலும் சொந்த மண்ணில் மாண்டிடுவேன்” என்று சொல்லி புறப்பட்ட பாமரர்கள், பசி, பட்டினி தாங்கிய   பரம ஏழைகள் ! பாத யாத்திரையாய்     தன் எல்லை வந்தவர்கள் , சொந்த மண் வந்த நிம்மதி பெருமூச்சு? நொடியில் சாந்தது மனிதம்! எளியவர்கள் மீது பாய்ந்தது அராஜக அத்து மீறல்கள் ஐயகோ! குடிக்க மாசற்ற தண்ணீர் இல்லை ஆனால் குளிக்க இரசாயனத் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்ட அவலம்! குழந்தைகள் முதல் தப்பவில்லை இந்தக் குளியலுக்கு!   கொள்ளை நோயே! எப்போதும் நீ கொடுமைக்குட்படுத்துவது எளியவர்களைத்தானோ!    ஒடுக்கப்பட்டோர் துயர் துடைக்க, எழியவர்க்காய் குரல் கொடுக்க , மடிந்துவிட்ட மனித நேயத்தை மறுபடியும் பிறப்பிக்க நீ வாராயோ? “Even if  we die by corona    we will die In our own soil. ” The Palmers, who went off saying ,  are Hunger and starvation Foot Pilgrims A sigh of relief that came when the reached their own soil  but their happiness...

ஏக்கம் (women's desire)

ஏக்கம் சிரிக்கும் உதடுகளின் பின்னே கனத்த மனம் மறைவது   ஏனோ? கன்னத்தில் பெற்ற முத்தத்தால் கண்கள் நீராடுவதும் ஏனோ? ஜன்னலோரம் சொந்தமாய் கொண்டும் மனம் இன்பம் கொள்ளாததும்   ஏனோ? காற்றோடு என் கண்ணீர்த்துளிகள் விளையாட , விழிகள் நித்திரை கொள்ளாமல் விழித்திருப்பதும் ஏனோ? புது முகங்கள் நடுவே இப்புது வாழ்க்கை ஏனோ? எனும் எண்ணத்தோடு உன்னை நிதம் நினைக்கிறேன் ! கனவிலும உன்னையே கண்டு அழைத்திட ஏங்குகிறேன்!

சாதனையாளர்கள் (achievers)

சாதனையாளர்கள் நம் தேடல்   நாம் கண்டெடுப்பதினின்று   வேறு! அக்கணத்தில்,   தேடல் முழுமை பெறுவதில்லை! அதை உணர்ந்து தேடலைத் தொடர்பவர் சிலரே! அச்சில ரே சாதனையாளர்கள்!

தோழி ( best friend )

தோழி கசியும் விழியோடு தடுமாறும் உதடுகள் சொல்லத் துடிப்பது என்ன? அகம் ஈன்ற வேதனையை முகம் மறைக்கத் துடிக்கும் காரணமும் என்ன? புதிதாய் மலர்ந்து நிற்கும் இந்த புரியாத மௌனத்தின் வினையும் என்ன? காலத்தோடு கண்ட கனவுகள் இன்று காற்றில் மாய்ந்து போனதோ? உன் அழுகுரலோடு நான் கண்ட விடியல் , நம் நட்பில் புது அனுபவம் விடுத்து சென்றதே ! அரவணைத்துத் தேற்றிட உன் அருகில் , கரம் நீட்டி   நிற்கும் ஒரு தோழி!

மாற்றம்! (change)

மாற்றம்! உலகின் வலிமை குறைந்ததற்கு காலமே காரணம் என்றாய்! கேட்கும் கேள்விகளுக்கு என்றும் மௌனமே பதிலாய்க் கொண்டாய்! புன்னகைக்க தருணங்கள் கேட்டேன் ! நினைவுகளே போதும் என்றாய்! நான் செய்த தவறோ ? நீ புதுமுகம் பார்த்ததன் விளைவோ? எத்தனை விரிசல் நம்மிடை வந்தாலும் அன்புடன் என்றும் அழைப்பேன் இன்பமாய் அண்ணா என்று!

கவிதை! poem

கவிதை! உணர்வுகள் பிறக்க உள்ளம் சிரிக்க! அமுதம் போன்று அமைவது கவிதை! உறவை   உடைத்து ஊனப்படுத்த நீ எழுதும் கவிதையோ ! காயப்பட்ட நெஞ்சத்தில் எறியப்படும் கற்களே ! காயம் நான் கொண்டதோ   வெறும் மாயம் என்று நீ உணர்த்திட! வழிமாறிச் சென்ற நட்போ திரும்பிடாது என்று நான் உணர்ந்திட! மாற்றம் கண்ட நெஞ்சமும் - இங்கே காற்றில் பறந்து செல்லுதே!