ஏக்கம்

சிரிக்கும் உதடுகளின் பின்னே
கனத்த மனம் மறைவது ஏனோ?
கன்னத்தில் பெற்ற முத்தத்தால்
கண்கள் நீராடுவதும் ஏனோ?
ஜன்னலோரம் சொந்தமாய் கொண்டும்
மனம் இன்பம் கொள்ளாததும் ஏனோ?
காற்றோடு என் கண்ணீர்த்துளிகள் விளையாட,
விழிகள் நித்திரை கொள்ளாமல் விழித்திருப்பதும் ஏனோ?
புது முகங்கள் நடுவே இப்புது வாழ்க்கை ஏனோ?
எனும்
எண்ணத்தோடு உன்னை நிதம் நினைக்கிறேன்!
கனவிலும உன்னையே கண்டு அழைத்திட ஏங்குகிறேன்!
Comments
Post a Comment