Skip to main content

backrooms - Tamil review and thoughts

Backrooms – ஒரு Psychological Thriller மட்டுமல்ல... மனித மனதின் நினைவுகளுக்குள் நடக்கும் ஒரு பயணம்



சமீப காலமாக ஹாலிவுட்டில் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகின்றன. Obsession படத்திற்குப் பிறகு, அந்த வரிசையில் என்னை மிகவும் கவர்ந்த படம் Backrooms.
இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருந்தேன். குறிப்பாக இதன் Backrooms concept பற்றி YouTube வீடியோக்கள், Instagram பதிவுகள் என கொஞ்சம் தெரிந்திருந்தது. அதனாலேயே ஒரு சந்தேகம் இருந்தது.
"இந்தக் கருத்தை எப்படி ஒரு முழுநீள திரைப்படமாக மாற்றியிருப்பார்கள்?"
படத்தைப் பார்த்த பிறகு அந்த சந்தேகத்திற்கு நல்ல பதில் கிடைத்தது.
மேலோட்டமாகப் பார்த்தால், கதை மிகவும் எளிமையானது.
தனது வாழ்க்கையிலும் தொழிலிலும் தோல்வியைச் சந்தித்த ஒரு முன்னாள் கட்டிடக் கலைஞர். அவர் நடத்தும் மரச்சாமான் கடையும் சரியாக இயங்கவில்லை. அந்தக் கடையைப் புதுப்பிக்கும் போது ஒரு விசித்திரமான நுழைவாயில் கிடைக்கிறது. அந்த வாசல் அவரை முற்றிலும் வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.
அதற்கு மேல் கதையைச் சொன்னால் அது ஸ்பாய்லராகிவிடும்.
ஆனால் இந்தப் படத்தின் உண்மையான பலம் கதையில் இல்லை.
அதன் பின்னால் இருக்கும் கருத்தில்தான்.
திரைக்கதையை விட என்னை கவர்ந்தது அதன் Concept
படம் முடிந்த பிறகும் எனக்கு பல கேள்விகள் இருந்தன.
நான் புரிந்துகொண்டது சரிதானா?
நான் நினைத்த விஷயத்தையே இயக்குநர் சொல்ல வந்தாரா?
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடி சில கட்டுரைகளையும் விளக்கங்களையும் படித்தேன்.
அப்போது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றிய விஷயம் ஒன்று.
Backrooms என்பது வெறும் இன்னொரு Alternate World அல்ல.
அது மனிதர்களின் நினைவுகள், குழந்தைப் பருவ அனுபவங்கள், மனக்காயங்கள், குற்ற உணர்வு, மன அழுத்தம் போன்ற உணர்வுகளிலிருந்து உருவான ஒரு உலகம் என்ற விளக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதனால்தான் அந்த உலகத்திலிருந்து வெளியே வந்தாலும், அதன் தாக்கம் மனிதர்களை விட்டு முழுமையாகப் போய்விடாது.
அந்த எண்ணமே படத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வைத்தது.
இன்னும் சொல்லப்படாத உலகம்
படத்தில் இந்த உலகம் எப்படி உருவானது என்பதற்கு சில குறிப்புகள் கொடுக்கப்படுகின்றன.
MRI மற்றும் Neuroscience தொடர்பான சில பரிசோதனைகள் மூலமாக இந்த உலகம் உருவானது என்பதற்கான சுட்டிக்காட்டுகள் இருக்கின்றன.
ஆனால் அதைப் பற்றி முழுமையாக படம் விளக்கவில்லை.
அதனால், ஒருநாள் Backrooms-ன் தோற்றத்தை மட்டும் மையமாக வைத்து இன்னொரு படம் வந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.
ஒரு Cinephile-ஆக என்னை கவர்ந்த விஷயம்
இந்தப் படத்தை உருவாக்கியவர் வெறும் இருபது வயதிலேயே இந்த உலகத்தை உருவாக்கியிருப்பது ஆச்சரியமாக இருந்தது.
மேலும், Backrooms பற்றிய ஒரு YouTube தொடரையும் அவர் உருவாக்கியிருக்கிறார் என்று தெரிந்தது.
அதையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்தப் படம் ஏற்படுத்திவிட்டது.
இறுதியாக...
வேகமான Psychological Thriller என்று மட்டும் எதிர்பார்த்து இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம்.
பொறுமையாக ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பாருங்கள்.
பிறகு இந்தப் படத்தைப் பற்றி கொஞ்சம் படியுங்கள்.
மீண்டும் ஒரு முறை Rewatch செய்யுங்கள்.
ஒவ்வொரு முறையும் புதிய விஷயங்கள் தெரிய வரும்.
எனக்கு அந்த அனுபவத்தை கொடுத்ததால், Backrooms இந்த வருடத்தில் நான் அதிகம் ரசித்த படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
மதிப்பீடு : ⭐⭐⭐⭐☆ (4/5)

Comments

Popular posts from this blog

FAITH AND FEAR

THE OTHER SIDE OF FEAR Fear is an emotion caused by the threat of danger, pain or harm. Fear is experienced in different aspects of life. The Holy Bible uses the phrase “do not be afraid" 365 times assuring us everyday not to fear for anything. God already knows the enemy will use fear as a weapon in our life to deviate from HIS plan. We try to end our life, we limit our talents, we fail to see the future ahead of us by the current status, we go into fear for no reason. David says, “He delivered me from all my fears. Those who look at Him are radiant; their faces are never covered with shame" (Psalm 34 : 4 & 5 – NIV) . When we look upon God no matter what the situation is, God will provide us HIS strength to overcome it. All we need to do is stand on the promises of God with faith till the very end by preserving our holiness. The other side of F ear is F aith. Faith works through love, “The only thing that counts is faith expressing itself through love" (Galati...

GOD’S ANGEL

  ENCOUNTER WITH ANGELS – GOD’S SECRET AGENT  IT’S A MIRACLE!   “Why do you long for the day of the Lord?” (Amos 5 :18 - NIV) when we are really facing a dark period in life, when life seems to be hopeless, when we have no strength to rise up, when we are constantly in pain and sufferings we long to seek light in our life. That light is only from the Lord, the light is Lord “I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life" (John 8:12 - NIV). God created angels to help mankind at different stages of our life. We may often encounter an angel in our life. These angels don’t have wings to be seen visibly.   These angels talk, walk, eat and are part of our daily activity. Yes, they do exist in human form like our friends, a company during our travel, a person you met in hotel, park, hospital, church etc who are brought together by God to meet, to share, to help, to motivate, to support and most import...

மனிதம்! (humanity)

மனிதம்! “கொரோனாவால் மடிந்திட்டாலும் சொந்த மண்ணில் மாண்டிடுவேன்” என்று சொல்லி புறப்பட்ட பாமரர்கள், பசி, பட்டினி தாங்கிய   பரம ஏழைகள் ! பாத யாத்திரையாய்     தன் எல்லை வந்தவர்கள் , சொந்த மண் வந்த நிம்மதி பெருமூச்சு? நொடியில் சாந்தது மனிதம்! எளியவர்கள் மீது பாய்ந்தது அராஜக அத்து மீறல்கள் ஐயகோ! குடிக்க மாசற்ற தண்ணீர் இல்லை ஆனால் குளிக்க இரசாயனத் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்ட அவலம்! குழந்தைகள் முதல் தப்பவில்லை இந்தக் குளியலுக்கு!   கொள்ளை நோயே! எப்போதும் நீ கொடுமைக்குட்படுத்துவது எளியவர்களைத்தானோ!    ஒடுக்கப்பட்டோர் துயர் துடைக்க, எழியவர்க்காய் குரல் கொடுக்க , மடிந்துவிட்ட மனித நேயத்தை மறுபடியும் பிறப்பிக்க நீ வாராயோ? “Even if  we die by corona    we will die In our own soil. ” The Palmers, who went off saying ,  are Hunger and starvation Foot Pilgrims A sigh of relief that came when the reached their own soil  but their happiness...