அன்பு தம்பி, தங்காய் கேட்டுக்கொள்!
வாழ்வின் சூத்திரம் அறிந்துகொள்!
அன்பினை கூட்டியே வாழ்வினை சுவைத்திடு!
ஆணவம் கழித்து அறிவை வளர்த்திடு!
இன்சொல் பெருக்கி உறவைக் காத்திடு!
ஈகை,பரிவு,பாசம் வகுத்து மனிதம் போற்றிடு!
நான் எனது என்ற குறுகிய வட்டத்தை விடுத்திடு!
நாம் நமது என்ற நேர்கோட்டில் பயணித்திடு!
இதுவே வாழ்வின் வெற்றிக்கணக்கு!
இனி இல்லை தோல்வி உனக்கு!

Comments
Post a Comment