தாயின் கருவறைக்குள்ளிருக்கும் பெண் சிசுவை
தரணியில் வரும் முன்னே சிதைக்கும் வீணர்களே!
தரங்கெட்ட உங்கள் சிந்தனைகளை என்று தவிர்ப்பீர்!
கள்ளிப்பால் புகட்டியும் நெல் மணி கொடுத்தும்
கனிவின்றி பாதகச் செயல் புரியும் வீணர்களே!
தரங்கெட்ட உங்கள் செயல்களை என்று நிறுத்துவீர்!
அன்பினால் அகிலத்தை ஆட்கொண்ட அன்னை தெரசா
அறிவு, தீரத்தினால் விண்ணில் சாகசம் செய்த கல்பனா
கூரிய மதியினால் பாரதத்தை மேம்படுத்திய இந்திரா
நலிவுற்றோர் நலம் காக்க போரிட்ட மேதாபட்கர்
தடகளத்தில் சாதனை புரிந்த தங்க மங்கை பி.டி.உஷா
அழகினால் அகிலமெங்கும் புகழ் பெற்ற ஐஸ்வர்யா ராய்
அனைவரும் இங்கே பிறந்தது பெண்ணாக!
என்று உணர்வீர் பெண்மையின் மேன்மையை?
பெண்ணின்றி புவியில் மானிடம் மலருமோ?
பெண்ணின்றி மண்ணில் மனிதம் வாழுமோ?
உணர்வீர் மானிடரே, பெண்மையை மதிப்பீர்!
பெண் குழந்தையைப் போற்றி வளர்ப்பீர்!

Comments
Post a Comment