Skip to main content

இனவெறி (racism)


இனவெறி

Opinion | Racism Is Everywhere, So Why Not Move South? - The New ...

மானிட குலமே நீ மதியிழந்ததேனோ?
மனிதமெனும் மாண்பை நீ மறந்ததும் ஏனோ?

இனமெனும் நஞ்சினை இவ்வுலகில் விதைத்தாய்!
இருளினும் கொடிய இகழ்ச்சியை சமைத்தாய்!

காடுமலை நீர்நிலத்தை வகையிட்ட உனக்கு,
காரணமென்ன கிடைத்தது இனத்தினை வகையிட!

ஆறறிவு கொண்ட நீ ஆற்றலுடன் வாழ்ந்திட,
இனமெனும் இடைச்சங்கிலி இகத்தினில் தேவையோ?

நிறவழி மொழிவழி மனிதரைப் பிரித்து,
பாகுபாடு பார்ப்பதும் பாரினில் ஏனோ?

இந்நிறம் ஏற்றமென்றும் இம்மொழி ஏற்றமென்றும்
உரைத்திடும் உரிமையை உனக்களித்ததாரோ?

இனத்தினால் பாகுபடுத்தி பிரிவினயைப் பார்க்கும் நீ
படுகொலை பல நிகழ்த்தி பாசாங்கு செய்வதும் ஏனோ?

அறிவியல் வளர்ச்சியின் அருமையை உணர்ந்தாலும்,
அறியாமை இருள் இந்த இனவெறி உணர்வாய்!

மனிதனைப் பிரிவுபடுத்தி மடிந்திட செய்தாலும்,
செந்நிற குருதி என்றும் ஒன்றே அறிவாய்!

இனத்தால் பிளவுபட்டு இழிவுற்று வாழ்ந்தாலும்,
உணர்வால் ஓரினம் என்றே அறிவாய்!

இனத்தினால் படுகொலை இருண்டிடும் மனித மாண்பு,
உயிர்களை அழித்திடும் கொடுமைகள் ஏராளம்!

ஏன் இந்த விபரீதம் பழிவாங்கும் பரிதாபம்!
ஏராளம் ஏராளம் எண்ணில்லா உயிரிழப்பு!

இந்நிலை மாறிடும் இனிய நாள்  என்றோ?
மனிதனை மனிதனாய் மதிப்பதும் என்றோ?

மடிவதும் உனைப்போல ஓருயிர் உணர்வாய்!
உயிர்பலி வாங்கும் மமதையைக் களைவாய்!

மேலினம் கீழினம் எல்லாமே ஓரினம்!
யுகத்தினில் மனிதர்கள் சரிநிகர் சமஇனம்!

இனமென்னும் பேதம் இனியில்லை உணர்வாய்!
மனிதமெனும் ஓரினம் மறுமலர்ச்சி காண்பாய்!


Racism

why did you lose your dignity
When did you forget humanity and dignity?

You have planted poison in this world!
You have cooked the worst dishonor of darkness!

as you classified water and land on base of needs
Whatever the reason, the race is classified!

You will live with energy,
Is there a need for interconnectivity? like racism

Apartheid
What about discrimination and pain?

This color is acceptable or not
do you have the right to judge on basis of color?

You are the one who sees race and discrimination
Is it a pretext for a massacre?

Despite the magnificence of scientific development,
The darkness of ignorance will feel this racism!

Even if you divide the man and die
You know the blood is red!

Although living apart from the racial divide
You know you all are humans!

The human dignity that darkens the genocide,
There are so many atrocities that ruin lives!

Why is this adultery revenge awful!
causes Numerous deaths!

when will you change?
Do you value a human being?

You will feel as you die!
dont take out a life for the sake of race

everyone is human!
Human beings are equal in all  ages!

Never feel bad!
feel renaissance in humanity !

Comments

  1. Next one with added English version do support and read

    ReplyDelete
    Replies
    1. yes sure actually we added english version in this post also

      Delete
  2. 😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FAITH AND FEAR

THE OTHER SIDE OF FEAR Fear is an emotion caused by the threat of danger, pain or harm. Fear is experienced in different aspects of life. The Holy Bible uses the phrase “do not be afraid" 365 times assuring us everyday not to fear for anything. God already knows the enemy will use fear as a weapon in our life to deviate from HIS plan. We try to end our life, we limit our talents, we fail to see the future ahead of us by the current status, we go into fear for no reason. David says, “He delivered me from all my fears. Those who look at Him are radiant; their faces are never covered with shame" (Psalm 34 : 4 & 5 – NIV) . When we look upon God no matter what the situation is, God will provide us HIS strength to overcome it. All we need to do is stand on the promises of God with faith till the very end by preserving our holiness. The other side of F ear is F aith. Faith works through love, “The only thing that counts is faith expressing itself through love" (Galati...

GOD’S ANGEL

  ENCOUNTER WITH ANGELS – GOD’S SECRET AGENT  IT’S A MIRACLE!   “Why do you long for the day of the Lord?” (Amos 5 :18 - NIV) when we are really facing a dark period in life, when life seems to be hopeless, when we have no strength to rise up, when we are constantly in pain and sufferings we long to seek light in our life. That light is only from the Lord, the light is Lord “I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life" (John 8:12 - NIV). God created angels to help mankind at different stages of our life. We may often encounter an angel in our life. These angels don’t have wings to be seen visibly.   These angels talk, walk, eat and are part of our daily activity. Yes, they do exist in human form like our friends, a company during our travel, a person you met in hotel, park, hospital, church etc who are brought together by God to meet, to share, to help, to motivate, to support and most import...

மனிதம்! (humanity)

மனிதம்! “கொரோனாவால் மடிந்திட்டாலும் சொந்த மண்ணில் மாண்டிடுவேன்” என்று சொல்லி புறப்பட்ட பாமரர்கள், பசி, பட்டினி தாங்கிய   பரம ஏழைகள் ! பாத யாத்திரையாய்     தன் எல்லை வந்தவர்கள் , சொந்த மண் வந்த நிம்மதி பெருமூச்சு? நொடியில் சாந்தது மனிதம்! எளியவர்கள் மீது பாய்ந்தது அராஜக அத்து மீறல்கள் ஐயகோ! குடிக்க மாசற்ற தண்ணீர் இல்லை ஆனால் குளிக்க இரசாயனத் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்ட அவலம்! குழந்தைகள் முதல் தப்பவில்லை இந்தக் குளியலுக்கு!   கொள்ளை நோயே! எப்போதும் நீ கொடுமைக்குட்படுத்துவது எளியவர்களைத்தானோ!    ஒடுக்கப்பட்டோர் துயர் துடைக்க, எழியவர்க்காய் குரல் கொடுக்க , மடிந்துவிட்ட மனித நேயத்தை மறுபடியும் பிறப்பிக்க நீ வாராயோ? “Even if  we die by corona    we will die In our own soil. ” The Palmers, who went off saying ,  are Hunger and starvation Foot Pilgrims A sigh of relief that came when the reached their own soil  but their happiness...