Skip to main content

கொரோனா (corona)


கொரோனா

Calling COVID-19 the “Wuhan Virus” or “China Virus” is inaccurate ...


உயிர்க்கொல்லி நோயே உன்னோடு உரையாட வந்தேன்!
உலகினிலே உலவுகிறாய் உயிர்குடிக்கும் விஷமாக!

கண்ணுக்குப் புலப்படாமல் கலங்கடிக்கும் நீ
கரைகடந்து செல்லும் நாள்தான் என்றோ?

அரசன் முதல் ஆண்டி வரை உன் அடிமை!
பணக்காரன் முதல் பாமரன் வரை உன் விருப்பம்!

உன்னாலே புதுப்பிறப்பு அடைகிறது இயற்கை!
சுதந்திரம் பெறுகிறது பறவை விலங்கினம்!

Coronavirus risks the return of currency wars | Financial Times

மனிதனின் வாழ்வோ மாண்டுபோகும் நிலை!
மட்டில்லா துயரம் மனமுருகும் சூழல்!

தடுப்பூசி இல்லாமல் தள்ளாடும் மருத்துவம்!
இயல்புநிலை நீங்காது திண்டாடும் மக்கள்

ஊரடங்கை மதிக்கும் மக்கள் கூட,
மதிக்காத மமதையரால் பாதிக்கப்படும் அவலம்!

தினக்கூலிகள் நிலையோ அந்தோ பரிதாபம்!
தற்கொலையில் முடியும் வாழ்க்கைப் படலம்!

Will India's experience with previous outbreaks help it tackle ...

பிச்சையில் உயிர்வாழும் வீடில்லா வாசிகளை
ஊரடங்குச் சட்டம் உயிர்கொடுத்துக் காக்குமோ?

கோவில் வாசலில் பசியில் கெஞ்சும் நெஞ்சங்கள்,
மக்களை எதிர்பார்த்து மடியும் மாதுயர்!

புலம் பெயர்ந்த தொழிலாளிகள் உரிமையிழக்கும் நிலை!
உணவு விடுதியும் கைவிட உணவின்றி உலவும் நிலை!

வீதியோரம் உணவில்லை விருந்தோம்பும் நெஞ்சமில்லை!
வாயில்லா ஜீவன்களோ வறுமையின் பிடியில்!

What is the best way to enjoy Holi in times of coronavirus?

காலத்தின் கோலம் கதியிழக்கும் உயிர்கள்!
கலக்கத்தில் பிடியில் கதறும் நெஞ்சங்கள்!

உயிர்போகும் நிலையில் கூட உறவில்லை அருகில்!
வெளிநாட்டு வாழ்க்கையில் வெடித்திடும் பூகம்பம்!

மருத்துவர் செவிலியர் கடவுளை மிஞ்சி,
தன்னுயிர் தந்து காத்திடும் புனிதம்!

சுய உணர்வு உண்டென்றால் கடைபிடிப்போம் சுயதனிமை!
குழந்தைகள் முதியவர் உயிர்காக்க உழைத்திடுவோம்!

Coronavirus: Rescue Airlifts from all over the World

காவல் தெய்வமாம் காவலர் நண்பர்கள்!
நடமாடும் தெய்வங்களாம் மருத்துவ மகான்கள்!

துணையிருக்கும் தூண்களாம் துப்புரவுப் பணியாளர்கள்!
உடனுழைப்போம் ஒன்றாக, தனித்திருப்போம் திடமாக!

சுத்தம் சோறு போடும் சுயதனிமை உயிர்காக்கும்!
பாரம்பரிய வாழ்க்கையோ பல்லாண்டு வாழவைக்கும்!

Illustrators, muralists to share their self-isolation experiences ...

உனை அழித்து உலகைக் காக்க உழைப்போம் ஓரினமாய்!
உடலால் தனித்திருப்போம் உள்ளத்தால் ஒன்றிணைவோம்!

கைகளைக் கழுவி களைந்திடுவோம் உனையே!
கலங்கடிக்கும் நிலைமையதை  போக்கிடுவோம் துணிவாக!

உலகை விட்டு நீங்குவாய் உயிர்வாழச் செய்வாய்!
உருண்டோடும் கண்ணீருடன் உருகியே கேட்கிறேன்!

என் விருப்பம் ஏற்றிடுவாய் எளியோரை வாழ வைப்பாய்!
ஏற்றம் பெறும் இவ்வுலகம் எழுச்சி காணும் மனிதம்!

Comments

  1. Meaningful lines and it was spectacular

    ReplyDelete
  2. Lines are really really awesome 👌👌

    ReplyDelete
  3. Wow...its really Awesome..... meaningful lines

    ReplyDelete
  4. Good one :) with deep meaning :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FAITH AND FEAR

THE OTHER SIDE OF FEAR Fear is an emotion caused by the threat of danger, pain or harm. Fear is experienced in different aspects of life. The Holy Bible uses the phrase “do not be afraid" 365 times assuring us everyday not to fear for anything. God already knows the enemy will use fear as a weapon in our life to deviate from HIS plan. We try to end our life, we limit our talents, we fail to see the future ahead of us by the current status, we go into fear for no reason. David says, “He delivered me from all my fears. Those who look at Him are radiant; their faces are never covered with shame" (Psalm 34 : 4 & 5 – NIV) . When we look upon God no matter what the situation is, God will provide us HIS strength to overcome it. All we need to do is stand on the promises of God with faith till the very end by preserving our holiness. The other side of F ear is F aith. Faith works through love, “The only thing that counts is faith expressing itself through love" (Galati...

GOD’S ANGEL

  ENCOUNTER WITH ANGELS – GOD’S SECRET AGENT  IT’S A MIRACLE!   “Why do you long for the day of the Lord?” (Amos 5 :18 - NIV) when we are really facing a dark period in life, when life seems to be hopeless, when we have no strength to rise up, when we are constantly in pain and sufferings we long to seek light in our life. That light is only from the Lord, the light is Lord “I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life" (John 8:12 - NIV). God created angels to help mankind at different stages of our life. We may often encounter an angel in our life. These angels don’t have wings to be seen visibly.   These angels talk, walk, eat and are part of our daily activity. Yes, they do exist in human form like our friends, a company during our travel, a person you met in hotel, park, hospital, church etc who are brought together by God to meet, to share, to help, to motivate, to support and most import...

மனிதம்! (humanity)

மனிதம்! “கொரோனாவால் மடிந்திட்டாலும் சொந்த மண்ணில் மாண்டிடுவேன்” என்று சொல்லி புறப்பட்ட பாமரர்கள், பசி, பட்டினி தாங்கிய   பரம ஏழைகள் ! பாத யாத்திரையாய்     தன் எல்லை வந்தவர்கள் , சொந்த மண் வந்த நிம்மதி பெருமூச்சு? நொடியில் சாந்தது மனிதம்! எளியவர்கள் மீது பாய்ந்தது அராஜக அத்து மீறல்கள் ஐயகோ! குடிக்க மாசற்ற தண்ணீர் இல்லை ஆனால் குளிக்க இரசாயனத் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்ட அவலம்! குழந்தைகள் முதல் தப்பவில்லை இந்தக் குளியலுக்கு!   கொள்ளை நோயே! எப்போதும் நீ கொடுமைக்குட்படுத்துவது எளியவர்களைத்தானோ!    ஒடுக்கப்பட்டோர் துயர் துடைக்க, எழியவர்க்காய் குரல் கொடுக்க , மடிந்துவிட்ட மனித நேயத்தை மறுபடியும் பிறப்பிக்க நீ வாராயோ? “Even if  we die by corona    we will die In our own soil. ” The Palmers, who went off saying ,  are Hunger and starvation Foot Pilgrims A sigh of relief that came when the reached their own soil  but their happiness...