அவலம்
யானைக்கு
கிடைத்திட்ட அனுதாபம்
எனக்கு
கிடைக்காத அவலம் கேளீர்!
கொரோனா வைரஸ் தீண்டிய எனை
தீண்டத்தகாதவன் என தள்ளிவைத்த உறவுகளின்
அவலம்!
இருவாரம் சிகிச்சை முடிந்து வந்த
எனை
இல்லாளும் இல்லத்தில் சேர்க்காத
அவலம்!
பெற்றெடுத்த பிள்ளைகள் எனைத் துரத்திவிட
வெறுமையுற்று
இன்னுயிரை மாய்த்து கொண்ட அவலம்!
புதுசிசுவை உலகிற்கு ஈந்த மகிழ்விலிருந்த
எனை
பொடிநடையாய் வீடு போய் சேரென
பாதிவழியில் இறக்கி விட்டுச் சென்ற
அவசர ஊர்தியின் அவசரம் அவலம்!
உயிர்
வாழ புலம்பெயர்ந்து வேலை செய்த நான்
உயிர்
பிழைக்க சொந்த மண்ணை நாடி நடந்த அவலம்!
இரவினில் இரயில் தண்டவாளங்களே என்
தலையணை
இரத்த களரியாய் அதிகாலையில் எனை
கண்ட அவலம்!
உணவின்றி உறக்கமின்றி கால்கள் தேய
நடந்து
ஊர் எல்லையை தொடுமுன் உயிர் துறந்த
அவலம்!
தூரத்து
மாநிலத்துக்கு படிக்க சென்ற மகனை
உயிரற்ற
உடலாகக் கண்ட பெற்றோரின் அவலம்!
என்னுயிரைத் துச்சமென மதித்து
மன்னுயிரைக் காத்திட மருத்துவம்
செய்த எனை
அமரனான பின்னும் அமைதியில் கலந்திட
இடுகாடோ, சுடுகாடோ தர மறுத்த அவலம்!
shame
Sympathy for the elephant
Shame on people's they don't sympathize humans
I was infected with the corona virus
Shame on the humanity that have been termed me as a untouchable!
Me who had just finished treatment for two weeks
Shame not even my better half accompanies me !
children who i gave birth drive me away
Shame on them for ruining my life as well theirs!
I was overjoyed at the new world
I went home dusty
Halfway down and left by ambulance
The urgency of the ambulance is a shame!
I worked in exile to survive
Shame on officials for making us runaway to our own soil to survive!
At night the railroad tracks are my pillow
Shame on society for seeing me in the early morning with a blood clot!
Walking long without food
It is a pity that he lost his life before touching the border of his town!
Son who went to study in a distant state
alas on the parents who saw the lifeless body!
Respect my life as trivial
The one who did the medicine to save humans
Immortal yet mingled in silence
It is a pity that they refused to give a place to rest their bodies!
Comments
Post a Comment