பெண்ணின் கனவு!
கனவே கனவே நீ யாரோ?
கண்முன் வருவாய் காற்றாக!
விடியாத பொழுதின் விடியல் நீ!
விரல் தீண்டும் என்னுயிர் தோழி நீ!
கண்களில் தோன்றும் வண்ணம் நீ!
கண நேரம் மகிழ்விக்கும் கலங்கரை நீ!


நிஜமில்லா நினைவுகளின் சங்கமமாய்
நெஞ்சில் நிற்கும் பிம்பம் நீ!
இனிய நினைவுகளை இதயத்தின் ஓரத்தில்
ஈரமாய் நிற்க வைக்கும் இன்பம் நீ!
என்னவரை என்முன் நிறுத்தி
என்னுயிர் காக்கும் எழில் நீ!
சிறுவர் முதல் பெரியவர் வரை
உனை எண்ணி ஏங்கும் ஊற்றாய் நீ!
பாசம் முதல் ஏக்கம் வரை
சோகம் முதல் ஆசை வரை நீ!
உன் காட்சிக்கு முடிவில்லை
உன் கற்பனைக்கு எல்லை இல்லை
உன்னாலே நிறைவேறும் சிலரின் விருப்பங்கள்!
உன்னாலே அகன்று போகும் சிலரின் தூக்கம்!
துக்கத்தை முழுதாய் அகற்றி இன்று
தூக்கத்தை தந்திடுவாய் எமக்கு!
நினைவினில் நிற்பாயோ விடிந்தபின்!
நில்லாமல் போவாயோ காற்றினில்!
மீண்டும் வருவாயோ என்னைத் தீண்ட
மேகமாய் போவாயோ என் நெஞ்சின் கனவே!
Comments
Post a Comment