தங்கை!
தரணியில் என் முதல் சேய் அவள்!
தனிமையில் என் உயிர் தாய் அவள்!
தன்னலம் மறக்க வைப்பாள்!
தாயாக மாற வைப்பாள்!
உறவுக்கு நீ முதல் படி!
உன்னாலே இதயத் துடிப்படி!
அவளின்றி எனக்கில்லை இன்பம்!
அவளாலே அகன்றிடும் துன்பம்!

வெல்கிறேன் உலகத்தை
உன்னோடு இருக்கயில்!
தோற்கிறேன் தனிமையிடம்
நீ இல்லா பொழுதினில்!
உருவத்தில் சிறியவள்
உள்ளன்பில் பெரியவள்!
உலகின் உறவுக்கு
இலக்கணம் அவள்!
நாமிருவர் சேர்ந்தால்
மறந்திடுவோம் உலகத்தை!
நாளெல்லாம் திருவிழா
சிறப்பிப்போம் சிறகடித்து!
நீ இல்லா
பொழுதினில் நீங்காது தனிமை!
நிழல் சொல்லும்
உன் பெயரை அது
தானே இனிமை!
தாயாய் சேயாய்
தோழியாய் தோன்றியவள்!
பிரிவின் சாரத்தில்
மறைந்திருப்பதேனோ!
உலகின் நியதி
இது உனை என்றும்
பிரிந்திட!
பிறப்போம் ஓர்
இதயமாய் சேர்ந்தே துடித்திட !
Comments
Post a Comment