ஆருயிர் காதலே!
ஒரு கணம் உன்
பிரிவு ஒரு யுகமாய்
மாறும்
தனிமையின் சாயல்
என் நினைவினில் தோன்றும்!
கடிகாரம் நகராமல் நாட்கள்
நீளும்
கண்களின் ஓரம்
கண்ணீர் கரையும்!
சிரிப்பின் சுவடுகள் சிதைந்தே
போகும்
சிறகில்லா பறவை
போல சிந்தனை மாறும்!
பார்க்கும் இடமெல்லாம் உன்
முகம் தோன்றும்
கேட்கும் குரல்
எல்லாம் உன் பெயர்
சொல்லும்!
எங்கே நீ சென்றாய்
என்று கண்கள் தேடும்
எப்போது வருவாய்
என்று உள்ளம் நாடும்!
நீ வரும் வழி
தேடி விழிகள் ஏங்கும்
காத்திருப்பின் கொடுமை
எண்ணி நெஞ்சம் வாடும்!
விரைவில் வா என்
விழிகளுக்கு விருந்தாக !!
அருகினில் வா
என் ஆருயிர் காதலே!!!

Comments
Post a Comment